கோவையில் உடைத்து பேசிய உதயநிதி..! என் வெற்றியைவிட செந்தில் பாலாஜி வெற்றி முக்கியம்..!!

 
1

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது உதயநிதி பேசும்போது, "செந்தில் பாலாஜிக்கு கரூர் பிறந்த வீடு, கோவை புகுந்த வீடு. பிறந்த வீட்டை போல, புகுந்த வீட்டையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்.கோயம்புத்தூர் திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை இந்த தேர்தலில் நிரூபித்து காட்டுங்கள். கோவை மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்".


பாசிச சங்கி கூட்டம் கோவையை அவர்களுடைய கோட்டை என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது திமுகவின் கோட்டை என்பதை செந்தில் பாலாஜி ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார். கோவையில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தோம், அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது. மோடியின் நம்பர் ஒன் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி.

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஏதாவது திட்டங்களை கொடுத்துள்ளார்களா. தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு அதிமுக, பாஜக நினைத்தார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் முன்கூட்டியே மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு தொகை கொடுத்தார்.

பெரிய கடை வீதி, கிராஸ்கட் சாலையில் மல்டி லெவல் ஷாப்பிங் மால் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். நம்முடைய ஆட்சி அமைந்ததும் அது செய்து தரப்படும். புலியகுளம், அம்மன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நம் ஆட்சி அமைந்த உடன் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

எனக்கு என்னுடைய தொகுதியை விட செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வனின் வெற்றி மிக மிக முக்கியம். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வெற்றியை விட கோவையின் வெற்றி மிக மிக முக்கியம். இருவரின் வெற்றி என்பது எதிர்த்து நிற்பவர்களின் டெபாசிட் போகின்ற அளவிற்கு இருக்க வேண்டும்" என்றார்.