#BREAKING உதயநிதி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

 
#BREAKING உதயநிதி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் காவல் வாகனத்தை விட்டு இறங்க உதயநிதி மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கிப்பட்டியில் இறங்கி தொண்டர்களுக்கு கையசைத்த உதயநிதி ஸ்டாலின் - விசாரணை தொடக்கம்!

தஞ்சையில் திமுகவினர் பல்லாயிரக்கணக்கில் குவிந்து வருவதால் தஞ்சை தெற்கு காவல்நிலையத்திற்கு செல்லாமல், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போலீசார் அழைத்து வந்தனர். "எங்கு FIR போடப்பட்டதோ அதே காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்" என வாகனத்தில் இருந்து இறங்க அவர் மறுப்பு தெரிவித்தார். வேறு காவல் நிலையம் அழைத்து வந்ததற்கான காரணம் கூறப்படாததால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பின் படி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள் என உதயநிதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட இழுபறிக்குப் பின் காவல் வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்குள் சென்றார் உதயநிதி. காவல் துறை வாகனத்தில் இருந்து இறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொண்டர்களை நோக்கி கையசைத்தார் . உதயநிதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.