'ஜனநாயகன்' படத்தை முடக்கியது உதயநிதி - எல்.முருகன் கூட்டணி": ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு!
தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த தவெக-வின் ஆதவ் அர்ஜுனா, 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் ஆளும் திமுக மற்றும் மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதைத் தடுக்க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டமிட்டுச் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா முன்வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டு, இது ஒரு கூட்டுச் சதி என்பதாகும். அவர் கூறியதாவது: "மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தான் ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் முடக்கினார். மேலும், இந்தப் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக கசிய விட்டதற்குப் பின்னால் பாஜக மற்றும் திமுக-வின் கூட்டுச் சதி உள்ளது. திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எல்.முருகன் இந்தப் படத்தை முடக்கியுள்ளார்." தற்போதைய அரசியல் சூழலில் எதிரெதிர் துருவங்களாகத் தெரியும் திமுக-வும் பாஜக-வும், விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக ரகசியமாக இணைந்து செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ குறித்து விஜய்யின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொதித்து வருகின்றனர். . இது தற்செயலாக நடந்தது அல்ல என்றும், படத்தின் வெற்றியைப் பாதிக்கும் நோக்கில் திட்டமிட்டுச் செய்யப்பட்ட வேலை என்றும் கூறி வருகின்றனர்



