சோபா மாடல் அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்து கொண்டு தான் இருக்கிறது - உதயநிதி..!!

 
1

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு தீவிரமாக ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்.எல்.ஏக்கள் கொள்முதல் பர்சேஸ் தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

"தொட மாட்டேன் அமைச்சர், அடுத்த காட்சி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? தொட்டா விட மாட்டேன்” என்று ஸ்கிரிப்ட் படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?

சோபா மாடல் அரசின் இந்த சலவை இயந்திரம் (Washing Machine) அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.