உதயநிதி ஒன்னும் போலி அரசியல்வாதி கிடையாது... அதுவே விஜய்..? தளபதியை அட்டாக் பண்ணிய திவ்யா சத்யராஜ்..!

 
1

திமுகவில் இணைந்த பின்னர் முதன்முறையாக அரசியல் மேடையேறி பேசிய திவ்யா சத்யராஜ், அதில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை சாடி பேசி இருக்கிறார். குறிப்பாக உதயநிதியையும் விஜய்யையும் ஒப்பிட்டு அவர் பேசி உள்ள பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யை போலி அரசியல்வாதி என திவ்யா சத்யராஜ் விமர்சித்து பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அவர் பேசியதாவது : “உதயநிதி ஸ்டாலின் சார், ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு, சொகுசு விமானத்தில் ‘பிரெண்டு’ கூட ‘பிரெண்டு’ திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு கடின உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் தான் உதயநிதி. அவரை எதிர்த்து யார் நின்றாலும் டெபாஸிட் போயிடும். அவர் ஒரு வீழ்த்த முடியாத ஹீரோ” என பேசி உள்ளார் திவ்யா சத்யராஜ்.

தொடர்ந்து கலைஞர் பற்றி பேசிய திவ்யா சத்யராஜ், “நான் கல்லூரியில் படிக்கும்போது ஆசிரியர் எல்லாரிடமும் நீங்க யாருடைய ரசிகை என கேட்டார். சிலர் நான் மைக்கேல் ஜாக்சனின் ரசிகை, அமீர்கான் ரசிகை என கூறினார்கள். ஆனால் அப்போது நான் கலைஞர் ஐயாவின் ரசிகை என்று பெருமையாக சொன்னேன். இன்று ஒரு பெண்ணாக இங்கு நின்று பேசுகிறேன் என்றால் அந்த தைரியம் எனக்குள் வந்ததற்கு காரணம் கலைஞர் ஐயா தான். அப்பா காசில் வாழாமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியம் வந்ததற்கும் கலைஞர் தான் காரணம்” என திவ்யா கூறினார்.