உதயநிதியின் 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் விழுந்து விபத்து

திருவள்ளூரில் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த 40 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் வீசிய பலத்த காற்றில் ஆட்டோவில் மீது விழுந்து சேதம் அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர்.
ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் மும்மொழி கொள்கை மூலம் இந்தி திணைப்பு நிதி பகிர் பாரபட்சம் ஆகியவை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் திமுக பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து கண்டன உரையாற்றுகிறார்.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை வரவேற்பதற்காக திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் பகுதியில் உள்ள சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் திமுக கொடிகளும் பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டது. அதுபோல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் எதிரே சுமார் 40 அடி உயரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் திருவள்ளூரில் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக ஆட்சியர் அலுவலகம் எதிரியே வைத்திருந்த முதல்வர் துணை முதல்வர் கட்டவுட் விழுந்தது. அவ்வழியாக சென்ற ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.இதனால் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுனர் உள்ளிட்ட பயணிகள் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். அதே போன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்தார் கட்அவுட் மின்சார கம்பி மீது விழுந்து அருந்ததால் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கட்டோட்டுகளை அப்புறப்படுத்தி மின்சார கம்பிகளை சரி செய்தனர்.