ஈபிஎஸ்-க்கு எதிரான தடையை நீக்கக்கோரி அமைச்சர் உதயநிதி பதில் மனு

 
tn

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஈபிஎஸ்-ஐ  தொடர்புப்படுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். 

tn

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில், இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

Kodanadu

இந்த சூழலில் கொடநாடு சம்பவத்தின் போது ஈபிஎஸ் முதல்வராக இருந்தார் என்பதால் பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டேன் .கொடநாடு வழக்குக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என எடப்பாடி பழனிசாமி கூற முடியாது  என்றும் அமைச்சர் உதயநிதி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் மனுவுக்கு விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து விசாரணை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.