மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கும் உதயநிதி?

 

மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கும் உதயநிதி?

மதுரைக்கு நாளை வரும் ராகுல் காந்தியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கும் உதயநிதி?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். பரப்புரை, மக்கள் கிராம சபை என இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியும் கிட்டத்தட்ட உறுதியான கூட்டணி தான். இருப்பினும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவில்லை.

மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கும் உதயநிதி?

இந்த சூழலில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க நாளை ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் . தமிழகம் வரும் ராகுல் காந்தி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் ராகுல் காந்தியை சந்திக்கும் உதயநிதி?

இந்நிலையில் மதுரையில் நாளை ராகுல் காந்தியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க உதயநிதி ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். அதே சமயம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் மதுரை வருகிறார். இதனால் உதயநிதி – ராகுல் காந்தி சந்திப்பு நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள உதயநிதி தற்போது அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்துவதும், பேசுவதுமாக உள்ளது கவனிக்கத்தக்கது.