தைவானை உலுக்கிய 'சாம்பி' சூறாவளி புயல்: சாம்பி புயலின் கோரத்தாண்டவம் வீடியோ..!

 
1

தைவானில் 'சாம்பி' புயல் தீவிரமடைந்து கரையை கடந்ததால், அங்குள்ள ஃபுகாங் மீன்பிடி துறைமுக பகுதியில் பல மீட்டருக்கு ராட்சத அலைகள் சீறியெழுந்து கொந்தளித்து வருகின்றன. இந்த அதிதீவிர புயல் காரணமாக வீசிய சூறாவளி காற்று மற்றும் கொட்டி தீர்த்த கனமழையால் லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆசியப் பகுதிகளை அச்சுறுத்தி வரும் சக்தி வாய்ந்த 'சாம்பி' (Typhoon Champi) சூறாவளி புயல் தைவான் மற்றும் அதன் அருகிலுள்ள கடலோரப் பகுதிகளைத் தீவிரமாகத் தாக்கியுள்ளது. இந்தப் பயங்கரப் புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தைவான் கடற்பகுதியில் வீசிய ராட்சத அலைகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புயல் காற்று மற்றும் மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

புயலின் தாக்கத்தால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தைவானின் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதன் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டது. எனினும், மின்வாரிய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு பல பகுதிகளில் மின் இணைப்பை மீட்டமைத்து வருகின்றனர்.

புயல் அபாயம் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் கடலோரப் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முகாம்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகத் கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

தைவானைக் கடந்து நகர்ந்துள்ள இந்த 'சாம்பி' புயல், தற்போது பலமிழந்து சீனாவின் கடற்கைப் பகுதிகள் மற்றும் ஜாப்பனிய தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. இதனால் அப்பகுதிகளிலும் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.