தாராபுரம் CM விஜய் பிரச்சார பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து..!!

 
11

தாராபுரத்தில் CM விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த பகுதியில், இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்தார். பிரச்சார நிகழ்வை வேடிக்கை பார்த்தவாறு வந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து, காயமடைந்தவரை அங்கிருந்த காவல்துறையினரும் தவெக தொண்டர்களும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திரளான கூட்டம் கூடியிருந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.