2 பெண்கள் காதலிக்கவும், ஒன்றாக வாழவும் எதிர்ப்பு- பறிதாபமாக உயிரைவிட்ட ஜோடி

 
எ

நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், ஒன்றாக வாழ்வதற்குத் தடுக்கப்பட்டதால், பெங்களூருவின் யெலஹங்காவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர்கள் சிர்ஜனா (22) மற்றும் ரீட்டா (23). இவர்கள் இருவரும் ஒன்றாகப் படித்ததாகவும், சிறுவயதிலிருந்தே பிரிக்க முடியாத தோழிகளாக இருந்ததாகவும், பருவமடைந்த பின் இருவரும் காதலித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் காதலை ஊர் மக்கள் கிண்டல், கேலி செய்ததாகவும், இருவரையும் பிரிக்கும் நோக்கில், அவர்களது உறவினர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இருவரையும் பெங்களூருக்கு அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களை ஒன்றாகத் தங்க அனுமதிப்பதற்குப் பதிலாக, குடும்பத்தினர் அவர்களை வெவ்வேறு பகுதிகளில் தங்க வைத்ததாகக் கூறப்படுகிறது. ரீட்டா ஃபிரேசர் டவுனிலும், சிர்ஜனா பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜக்கூரிலும் தங்க வைக்கப்பட்டனர். 

பிரிந்திருந்த போதிலும், இருவரும் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை சந்தித்து வந்ததாகவும், பெரும்பாலும் ஒரு உறவினரின் இல்லத்தில் மதிய உணவிற்காக ஒன்றுகூடியதாகவும் கூறப்படுகிறது. சந்திப்பின்போது, இரு பெண்களுக்கும் ஆண்களுடன் திருமணம் செய்து வைப்பது குறித்த குடும்பத்தினரின் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். அவர்கள் இருவரும் தம்பதிகளாக இணைந்து வாழ்வதை சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களிடம் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பிரிவினால் ஏற்பட்ட மன உளைச்சல், வேறு ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அழுத்தம் மற்றும் அவர்களின் உறவுக்கு இருந்த சமூக எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாத இரு பெண்களும் திட்டமிட்டு சிவனஹள்ளியில் உள்ள கிசார் ஹோட்டலுக்கு எதிரே ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.