தொழிற்சாலையில் சுவர் இடிந்து இரு பெண்கள் பலி! வேலைக்கு சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

 
ச்

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் சுவர் இடிந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

கடலூர் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதேபோல் சிப்காட் பகுதியில் உள்ள சங்ககொலிகுப்பம் என்ற பகுதியில் இந்தியன் பாஸ்பேட் என்ற ஒரு ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டுமான பணியும் நடைபெற்று வரும் நிலையில அந்த கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை அந்த தொழிற்சாலை ஒரு பகுதி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான பெண் தொழிலாளர்கள் இருவர் சிக்கிக் கொண்டனர்.

 

உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்க துவங்கினர். இளமதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு பெண்ணான இந்திரா என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில அவரும் தற்போது உயிரிழந்தார் .தற்போது இரண்டு பெண்களின் உடலையும் மீட்ட கடலூர் முதுநகர் போலீசார் இது குறித்த வழங்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் ரசாயன ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல், இரங்கல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.