காரைக்குடி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த இருவர் பலி

 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

சிராவயலில் மைதானத்துக்கு வெளியே கட்டுமாடுகள் அவிழ்த்து விட்டதில் வேடிக்கை பார்த்த சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

ஜல்லிக்கட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிராவயலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது இந்த போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார் போட்டியில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட 271 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகிறது . பதிவு செய்யப்பட்ட 81 மாடுபிடி வீரர்கள் பல்வேறு சுற்றுகளாக களம் இறங்கினர் மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500 காளைகள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்படாத காளைகளை ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியை காண சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர்ஆயிரக்கணக்கான வேன்களில் வந்து பங்கேற்றனர். 

சிராவயல் புதுாரில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொட்டலில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர். பெறும் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.  சிராவயல் மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் 800 போலீசார் வரை ஈடுபட்டனர்.  கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்ட மாடு முட்டியதில் வளையட்டிய சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் (12) உயிரிழந்தார். மேலும் 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததார்.