திருமண விருந்து சாப்பிட்ட இருவர் உயிரிழப்பு - தீவிர சிகிச்சை பிரிவில் 20ற்கும் மேற்பட்டோர்!!

 
tn

கடலூரை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் பள்ளி நீரோடையைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மூன்றாம் தேதி திருமணம்  செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.  அதன்படி கடந்த 3ம் தேதி பெரிய குள்ளஞ்சாவடியில்  உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற உடன் காலை உணவு பரிமாறப்பட்டது.  திருமண விழாவிற்கு வந்த இரு வீட்டாரும்,  நண்பர்களும் காலை உணவினை சாப்பிட்டனர்.

Death

புலியூர் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் என்பவரும் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் . வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் உடல் சோர்வு காணப்பட்டுள்ளது.  இதன் காரணமாக உடனடியாக அவரை அவரது உறவினர்கள் குள்ளஞ்சாவடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதே போல் திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட புலியூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், சுதாகர் , உக்கிரமூர்த்தி,  கண்ணன் , பழனிவேல் , சிங்காரவேல் , சிகாமணி , தேவர்,  சின்னமணி,  பொன்னையா, சின்னம்மாள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி,  வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

death

இதைத்தொடர்ந்து அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அதேபோல் வைத்தியலிங்கம் மகன் நாராயணசாமியும் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.  இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.