பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து 2 பேர் கொடூர மரணம்
Apr 1, 2025, 15:05 IST1743500141000

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடையபாளையம் பிரிவு அருகே செயல்பட்டு வரும் தனியார் பப்பாளி ஜூஸ் ஆலையில் பப்பாளி சாறுகள் நிரம்பி இருந்த தொட்டியில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் தவறி விழுந்தனர். முதலில் ஒருவர் தவறி விழுந்த நிலையில், காப்பாற்ற முயன்ற மற்றொரு தொழிலாளியும் தவறி விழுந்து இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த தொழிலாளர்கள் ரோகித் திகில், அருண் குமார்கோ ஆகியோரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.