"தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை" - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம்!

 
tn

தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்று  தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறநிலையத்துறையின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக புகார் சொல்லப்பட்டது.  ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை.  6,7-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் , இது தொடர்பாக தான் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாகவும் சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்து பரப்பரப்பை கிளப்பினார்.  இதுக்குறித்து  விளக்கம் கேட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

Chidambaram

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக சமீபத்தில் ஆளுநர் ரவி குற்றம் சாட்டியிருந்த நிலையில் ,தற்போது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

tn

தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மற்றும் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட தீட்சிதர்களின் குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் குழந்தை திருமணமே நடைபெறவில்லை என்றும் கட்டாயத்தின் பேரில் தீட்சிதர்களின் குழந்தைகள் ஒப்புக்கொண்டதாகவும்,  தேசிய பாதுகாப்பு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறியுள்ளார் . அதே சமயம் இருவிறல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் குழந்தைகளின் அந்தரங்கப் பகுதிகள் தொடப்பட்டது உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளார். குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகார் கூறியவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை இரண்டு நாட்களுக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.