தஞ்சையில் இருவர் பலி- டாஸ்மாக் பாருக்கு சீல்

தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் மீன் வியாபாரிகள் 68 வயதான குப்புசாமி மற்றும் 36 வயது விவேக் ஆகிய இருவரும் அளவிற்கு அதிகமாக மது அருந்தி உயிரிழந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வந்த நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை வாங்கி குடித்த மீன் வியாபாரி 68 வயது குப்புசாமி என்ற முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் விவேக் என்ற 36 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இந்நிலையில் தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் மீன் வியாபாரிகள் 68 வயதான குப்புசாமி மற்றும் 36 வயது விவேக் ஆகிய இருவரும் அளவிற்கு அதிகமாக மது அருந்தி உயிரிழந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்திவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடையில் உள்ள மதுபான இருப்பை கணக்கெடுத்த அலுவலர்கள், கடைக்கும், அருகில் உள்ள பாருக்கும், காவல் ஆய்வாளர் சந்திரா உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்