தொல்லை கொடுத்த குரங்கை சமைத்து சாப்பிட்ட இருவர் கைது

 
குரங்கு

சாணார்பட்டி அருகே தோட்டத்தில் தொந்தரவு செய்த குரங்குகளை, வேட்டையாடியவர்கள் கைது செய்யப்பட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடை பஞ்சாயத்தில் வீரசின்னம் பட்டியைச் சேர்ந்தவர் இராஜ ராம் (33). இவர் தோட்டத்தில் குரங்குகள். விவசாய விளைத்த செடிகள், மற்றும், காய்களை அழித்து வந்துள்ளது. இவற்றை விரட்டுவதர்குக்கு தனது நண்பரான. வடுகபட்டியைச்சேர்த்த ஜெயமணி (31) இருவரும் தோட்டத்திற்கு வரும் விரட்டும் நோக்கில்  குரங்குகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர், சுட்ட குரங்குகளை சமைத்து சாப்பிட்டுள்ளனர். 

இது பற்றி வனத்துறையினருக்கு இரகசிய தகவல் தெரிவிக்கவே தகவளின் பேரில் வனத்துறையினர்வனச்சரகர் மதிவாணன் தலைமையில் தோட்டத்தில் சோதனையிட்டனர். அப்பொழுதுஇருவரும் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கிகளையும், குரங்கின் தோள்களையும் கைப்பற்றினார். இதுவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டங்களில் குரங்குகளின் தொந்தரவு இருந்தால் வனத்துறைகளிடம் தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.