தவெக செயற்குழு உறுப்பினர் அனீஸ் கட்சியிலிருந்து நீக்கம்..!
கன்னியாகுமரி மாவட்ட தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர் அனீஸ் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குப் புகழீனத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி :
அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக குமரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி பேரம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக பேரம் பேசிய ஆடியோ வெளியாகியது. கன்னியாகுமரி மதியம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் அனீஸ் பேரம் பேசியுள்ளார். பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசிய ஆடியோ வெளியானது. இறுதியாக 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வழக்கறிஞராக நியமனம் ஆகலாம் என்று அனீஸ் அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

