ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் #மன்னிப்பாவது_மயிராவது!

மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆவது ஆண்டு தொடக்க விழா நாள் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “முதுமையை கேலி செய்ய முடியாது. அது உங்களுக்கும் வரும் எனக்கும் வரும். ஆனால் அந்த வயதில் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து. என்னுடைய முதுமை எப்படி இருக்கும் என சொல்லமுடியாது. நான் ஆக்டிவ்வாக இருக்கும்போது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அதன்பிறகு சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மக்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்.

கருணாநிதி மட்டுமே சக்கர நாற்காலியில் இருந்தவர் இல்லை. நிறைய பேர் இருந்துள்ளனர். நான் கருணாநிதி மீது நிறைய மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். நான் அவரை குறிப்பிடவில்லை. நான் என்னுடைய முதுமையை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கின்றனர்.” எனப் பேசியிருந்தார்.

Image

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன், திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியை குறிப்பிடும் விதமாக பேசியதாக சமூக வலைதளங்களில் திமுகவினர் கொளுத்தி போட அதற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அரசியலில்‌ ஈடுபட மாட்டேன் என்ற கமல் பேச்சு சர்ச்சையான நிலையில், கமலை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி #மன்னிப்புகேள்கமல் என்ற ஹெஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

அதற்கு எதிராகவும், கமலுக்கு ஆதரவாகவும் தற்போது கமல் ஆதரவாளர்கள் #மன்னிப்பாவதுமயிராவது” என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். உண்மையில் கமல்ஹாசன் அந்த வீடியொவில் தன் முதுமையில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அரசியலில்‌ ஈடு பட மாட்டேன் என்று சொல்வதில்‌‌ என்ன தவறு? என்றுதான் கூறுகிறார். கருணாநிதி உள்ளிட்ட யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது.