செம ட்விஸ்ட்..!! அமமுக எம்எல்ஏ காமராஜ் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேச்சு..!!

 
Q

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் இன்று (மே.12) நடைபெற்று வருகிறது. அப்போது, புதிதாக பதவியேற்ற ஜேசிடி பிரபாகருக்கு MLA-க்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அமமுக MLA காமராஜ் பேசுகையில், "தவெக ஆட்சி 5 ஆண்டு காலம் தொடர வேண்டும். இளைஞர்கள் அதிகளவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட அவையில் உள்ள அனைத்து இளைஞர்களும் நல்லாட்சி தருவார்கள் என நம்புகிறோம்" என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.