தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்...சுவாரசிய சம்பவம்!!

 
tn

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

School Education

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இரட்டையர்கள் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.  ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பயிலும் சகோதரர்கள் இருவரும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 600க்கு 478 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பஞ்ச நதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இரட்டையர்களான நிகில் மற்றும் நிர்மல்,  மதிப்பெண்களில் கூடுதல் குறைதல் ஏற்பட்டிருந்தால் சற்று மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும் தற்போது தங்கள் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றதால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளனர். சகோதரர்கள் இருவரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் கனவை நோக்கி செல்வது பாராட்டுக்குரியது. 

t
முன்னதாக கடந்த ஆண்டு கோவை வடவள்ளியில் வெவ்வேறு பாடப்பிரிவில், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.