திருமணம் ஆகாத விரக்தியில் இரட்டை சகோதரிகள் தற்கொலை

 
suicide

கும்பகோணத்தில் குடும்ப வறுமை மற்றும் திருமணமாகாத மன அழுத்தத்தில் 34 வயதாகும் இரட்டையர் சகோதரிகள் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவை சேர்ந்த தியாகராஜன் என்ற கூலி தொழிலாளியின் மகள்கள் பாமா, ருக்குமணி (34).இவர்கள் இரட்டையர்கள் . கூலி தொழிலாளியான தியாகராஜனுக்கு போதிய வருவாய் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. 44 வயதான மகனுக்கும் திருமணமாகவில்லை, 34 வயதான பாமா மற்றும் ருக்மணிக்கும் திருமணமாகவில்லை. குடும்ப வறுமை மற்றும் திருமணமாகாத ஏக்கம் காரணமாக பாமா, மற்றும் ருக்மணி ஆகியோர் கடந்த 30 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.

வெளியே சென்று இருந்த அவரது தந்தை மற்றும் சகோதரர் வந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் ருக்குமணி 2ம் தேதியும், மற்றும் பாமா 3ம் தேதியும் உயிரிழந்தனர்.

death

குடும்ப வறுமை காரணமாக சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.