திருவண்ணாமலையில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் சாமி தரிசனம்

 
ச்ச் ச்ச்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் சாமி தரிசனம் செய்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகள்,இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் அரசியல் முக்கிய தலைவர்கள் என அனைவரும் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பொன்னியின் செல்வன், அடங்க மறு, கோமாளி, பராசக்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் உடன் இணைந்து இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார்.

முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர், அதனைத் தொடர்ந்து உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த நடிகர் ரவி மோகனுடன் அவரது ரசிகர்கள் குண்டு எடுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தனர். அண்ணாமலையார் திருக்கோவில் தூய்மை பணியாளர்கள் பக்தர்கள் என பலரும் தொடர்ந்து அவரடன் செல்பி எடுத்த மகிழ்ந்தனர்.