“ஆதரிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் நன்றி”- விஜய்

 
ச்

நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தவெக தலைவரும், முதல்வருமான விஜய் கூறியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி - முதலமைச்சர் விஜய் அரசுக்கு 144 பேர் ஆதரவு -  BBC News தமிழ்

சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிராக (EPS அணி) 22 பேரும், நடுநிலையாக 5 பேரும் வாக்களித்தனர். இதனால், 144 என்ற பெரும் ஆதரவுடன் விஜய் அரசு தனது பெரும்பான்மையை அவையில் நிரூபித்துள்ளது.


இந்நிலையில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தனது எக்ஸ் தளத்தில், “மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்/