“எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்”- விஜய்

 
Vijay

எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயக கடமை ஆற்றுவதை தவிர்க்காதீர் என தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “வாக்காளப் பெருமக்களே, வணக்கம். நமது வாக்கு- நமது உரிமை. ஜனநாயகக் கடமை. எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர். ஜனநாயகம் காப்பது நம் கடமை. ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.