“சட்டசபையில் பார்ட்டி பண்டுனு தான் சொன்னேன்.. எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்”- விஜய்
சட்டப்பேரவையில் பார்டி பஃண்ட் என்றுதான் சொன்னேன். எந்த கட்சிக்கான Party Fund என்று கூட சொல்லவில்லை. அதை சொன்னதும் எடுத்தார்கள் பாருங்க ஒரு ஓட்டம் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “நான் கரூர் வந்தபோது, எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகம் என போலீசார் சொல்லியிருக்கலாம் அல்லவா?காவல்துறையினர் எங்களிடம் கேட்காமலே கூட நிகழ்வை ரத்து செய்திருக்கலாமே?நெடுஞ்சாலையில் இருந்து போலீசாரே எங்களை அழைத்து வந்த அந்த நாடகத்தை நான் நம்பிவிட்டேன். என் வாழ்வில் மிகப்பெரிய வலி ‘கரூர் சம்பவம்’... போலீஸே கூட்டிவந்து விட்ட அந்த நாடகம்... கரூர் போலீஸை அன்னைக்கு நம்பிட்டேன். ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது. அது ரத்தத்துலயே கலந்து இருக்குனு சொன்னவங்க எல்லாம் ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் போய் பாருங்க. ஒரு ரூபா லஞ்சம் கிடையாது. எத்தனை கோடி ஊழல் நடந்திருக்கிறது என எங்களுக்கு தெரியவில்ல, தோண்ட தோண்ட ஊழல் வருகிறது. மக்கள் நம் பக்கம்; அப்புறம் எதுக்கு இந்த குதிரை, ஒட்டக பேரம்...” என்றார்.

