“எத்தகைய சாவல்களையும் எதிர்க்கொள்ள தயார்” - தோழமை கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் திட்டவட்டம்

 
ச்

2 மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும், 6 மாதத்தில் கலைந்து விடும் என சொல்வதை பற்றி கவலைப்படாதீர்கள். த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என முதலமைச்சர் விஜய் கூறினார்.

Image

சென்னை அருகே நடைபெற்ற தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “எத்தகைய சாவல்களையும் எதிர்க்கொள்ள தயார். தவெக தற்போது வலிமையான கட்சியாக உள்ளது. மேலும் சில கட்சிகள் நம்முடன் கூட்டணிக்கு வர உள்ளனர். பல ஆண்டுகளுக்கு இந்த கூட்டணி நிலைத்து நிற்கும். 2 மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும், 6 மாதத்தில் கலைந்து விடும் என சொல்வதை பற்றி கவலைப்படாதீர்கள். த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும். ஊழலற்ற, சமூகநீதி மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. தவெக தலைமையில் அமைய உள்ள கூட்டணிக்கு பெயர் உள்ளது. அடுத்த கூட்டத்தில் கூட்டணிக்கான பெயரை அறிவிப்பேன். தோழமை கட்சிகளை ஒருங்கிணைக்க குழுவை உருவாக்க வேண்டும்.சமூக நீதி கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை நிச்சயம் கொடுப்போம்” என பேசினார்.