எனது தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் - விஜய் அறிவிப்பு

 
எனது தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் - விஜய் வாக்குறுதி

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு கூடுதல் ஸ்பெஷலாக மாதம் ஒருமுறை வருவேன் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய விஜய், “தமிழ்நாட்டின் முதல் பெரை தமிழ் மொழி, தமிழ் மொழியின் முதல் பெருமை திருக்குறள். திருக்குறல்மக்கு வழிக்காட்டி. அந்த திருக்குறளில் கூறி இருக்கும் அறம், பொருள், இன்பம் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாராகி இருக்கிறது.இந்த விஜய்யை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம், ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். மக்களின் பைசாவை தொட மாட்டேன். ஆட்சிக்கு வந்ததும் சொல்லாததையும் செய்வோம். அது வேற விஷயம். ஆனா, இப்ப செய்ய முடியிறதை செய்யப் போறதை மட்டும்தான் சொல்லியிருக்கோம். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு கூடுதல் ஸ்பெஷலாக மாதம் ஒருமுறை வருவேன். மக்கள் என்னை சுலபமாக சந்திக்கலாம்” என்றார்.