“ஊழல் செய்ய மாட்டேன்... அடிமையாக இருப்பதற்காகவோ, அண்டிப் பிழப்பதற்காகவோ அரசியலுக்கு வரவில்லை”- விஜய்
மக்கள் நம்மை நம்புகின்றனர். நம்புகிறவர்களுக்காக உழைப்பதே நம் குணமாகிவிட்டது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “அழுத்தம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. இந்த மாதிரி அழுத்தத்துக்கு எல்லாம் அடங்குபவனா நான்? மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். நம் அரசியல் களத்தில் மிக முக்கியமான காலக்கட்டம் இது. அதிமுக நேரடி சரண், திமுக மறைமுக சரண். நான் அடிமையாக இருப்பதற்காகவோ, அண்டிப் பிழப்பதற்காகவோ அரசியலுக்கு வரவில்லை. முன்னாள், இன்னாள் ஆட்சியாளர்களை போல் நான் ஊழல் செய்யவே மாட்டேன். எந்த சதி, அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டேன். மக்கள் நம்மை நம்புகின்றனர். நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
மக்கள் எனக்கென தனி இடம் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் நம்மை நம்புகின்றனர். நம்புகிறவர்களுக்காக உழைப்பதே நம் குணமாகிவிட்டது. இந்த தேர்தல் கூட்டணி தொடர்பான ஜோசியங்கள் வெளியே நடந்துகொண்டுள்ளது. இனி சினிமாவா முதல்வன் படமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் நான் ஊழல் செய்ய மாட்டேன். தீயசக்தி, ஊழல் சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது. எல்லாரும் அண்ணாவை மறந்துவிட்டனர். ஆனால் தவெகவினர் அண்ணாவை மறந்துவிடக்கூடாது” என்றார்.


