“பிரதமர் மோடிக்கு நன்றி... உங்களிடமிருந்து இதைதான் எதிர்பார்க்கிறோம்”- விஜய் பதிவு

 
ச்

முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நான் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே நோக்கம். தமிழகத்தின் தொடர் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.