தவெக செயல்வீரர்கள் கூட்ட மேடைக்கு விஜய் வருகை- விசில் அடித்து தொண்டர்கள் உற்சாகம்
மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு 128 மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம் - நகரம் - பகுதி - பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 2500க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு கட்சியின் சின்னமான விசில் கொடுத்து உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி சின்னம் விசில் தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசுவார். தவெகவின் விசில் சின்னத்துடன் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். செயல் வீரர்கள் கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு, தேர்தல் வியூகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.


