“உண்மையான காங்கிரஸ் தவெக பக்கமே... சில பல கோடிகளை கொடுத்து காங்கிரஸை ஸ்டாலின் கையில் போட்டுக்கொண்டார்”- விஜய்

 
aw

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதுமே செய்து வருகிறார். அந்த வகையில் இன்று நெல்லை வந்துள்ளார். 


நெல்லை கேடிசி நகர் பகுதியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய், “திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடந்திருக்காது. திமுக, பாஜக கூட்டணிகள் உள்ளுக்குள் ஒன்றுதான். விஜய் வந்துவிடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். அடுத்து அவர்களால் ஆட்சிக்கு வர முடியாத ஒரு சூழலை மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.நமக்கு எவ்வளவு நெருக்கடிகளை, பிரச்சனைகளை கொடுத்தார்கள். நிறைய அவதூறுகளை பரப்பினார்கள். திமுக கூட்டணி கலகலத்து போய்விட்டது. திமுகவைவிட பாஜக அணியின் நிலை மிக மோசம். உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் உள்ளது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் சார் கையில் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நான் இருக்கிறேன். எனக்கு ஏதாவது ஒன்னு என்றால் மக்கள் கலங்குவார்கள். விஜய் மட்டும் வெளியே வரக்கூடாது என்று தனியாக ஒரு எஸ்ஓபி போடு என்று சொன்னார்கள் அதுவும் எடுபடவில்லை. திமுகவுக்கும் பாஜகவுக்கும் என் மீது கோபம்.

ஜனநாயகன் படத்திற்கு யார் தடை விதித்தார்கள் என்று உங்களுக்கே தெரியும். அது மக்களிடம் எடுபடவில்லை. 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர். நம் குடும்பத்தில் இருக்கும் ஒருவரைதான் வேட்பாளராக தேர்வு செய்து உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். 2026 தேர்தல் ஒரு அதிசய தேர்தல். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் போன்றது.இந்த முறை தவெக ஆட்சி அமைக்கும். இன்னும் பல தலைமுறைக்கு நம் குடும்பங்கள் எல்லோரும் நல்லா இருப்போம். வாக்கை வீணடிக்க வேண்டாம்.” என்றார்.