"தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன்"- நாஞ்சில் சம்பத்

 
ச் ச்

மதிமுக, அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.