காரைக்குடியில் தவெக வெற்றி
Updated: May 4, 2026, 16:49 IST1777893577047
காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பிரபு 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 48,125 வாக்குகளையும், அதிமுக கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்ட அமமுக வேட்பாளர் 29,412 வாக்குகளை பெற்றுள்ளனர். நாதக சீமான் - 27,214 பெற்று தோல்வியடைந்துள்ளார். நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படும் காரைக்குடி தொகுதி தமிழக வெற்றிக்கழகம் வசமாகியுள்ளது.

