“ஸ்டாலின் என்ன, அவர் அப்பாவே நின்னாலும் தோற்கடிச்சிருப்பேன்”- வி.எஸ்.பாபு

 
s

இனிமேல் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது.. ஒரே கட்சி தவெக தான் என கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு கூறினார்.

சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய  எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, “தி.மு.கவுல கடைசி வரைக்கும் அவங்களே தான் பதவியில இருப்பாங்க... முன்னாள் தி.மு.க அமைச்சருங்க யாராவது ஒரே ஒருத்தர் எம்.எல்.ஏ ஆனா கூட என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன். தலைவர் விஜய் எனக்காகப் பிரச்சாரம் செய்ய கொளத்தூருக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வந்தார்; ஆனால் அப்போதே என் வெற்றி உறுதியாகிவிட்டது. கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாச்சு. ஸ்டாலின் என்ன, அவரின் அப்பாவே நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன். சொல்வதைச் செய்யும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் விஜய் மட்டுமே. தமிழ்நாட்டில் இனி தவெக மட்டும்தான். திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது” என்றார்.