தவெகவின் விலையில்லா வீடு- என்.ஆனந்த் திறந்து வைத்தார்

 
ஜ்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்டப்பட்ட விலையில்லா வீட்டை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழங்கினார்.

சென்னை வில்லிவாக்கம் மேற்கு பகுதி சார்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலையில்லா வீட்டினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகினார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கத்தை சேர்ந்த கணபதி பிரேமா என்கிற தம்பதியினருக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவசமாக கிட்சென் வசதியுடன் சிமெண்ட் சீட்டு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 

விலையில்லா வீட்டை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் திறந்து வைத்து பூஜை செய்தார். பின்பு அப்பகுதியை சேர்ந்த 100 பொதுமக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.