தவெகவை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிமுகவிலிருந்து வந்துள்ளோம் - விஜயபாஸ்கர்
Updated: Aug 23, 2026, 11:20 IST1787464206050
ஏற்கனவே வலிமையோடு இருக்கும் தவெகவை மேலும் வலுப்படுத்துவதற்கு நான் உட்பட பலர், அதிமுகவிலிருந்து, வந்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடந்த தவெக சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “தொடமாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்களையும் விடமாட்டோம் என சொல்லி, எங்க செயல்பாடுகளை பாருங்கன்னு சட்டமன்றத்தை LIVEஆ கொடுக்குறாங்க.. அதுக்கு ஒரு துணிச்சல் வேணும்.. தென்னிந்தியா முழுக்க மக்கள் அன்பை பெற்ற ஒரே தலைவர் விஜய்.. இனி எந்த தேர்தல் வந்தாலும் த.வெ.க தான் வெற்றி பெரும். ஏற்கனவே வலிமையோடு இருக்கும் தவெகவை மேலும் வலுப்படுத்துவதற்கு நான் உட்பட பலர், அதிமுகவிலிருந்து, வந்துள்ளோம்” என்றார்.

