1.50 கோடி வாக்கு- எம்.ஜி.ஆரை பின்னுக்குத் தள்ளுவாரா விஜய்?
May 4, 2026, 17:30 IST1777896013427
போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 30% வாக்குகளை கடந்தது தமிழக வெற்றிக் கழகம்.
போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 30% வாக்குகளை கடந்தது தமிழக வெற்றிக் கழகம். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 1.50 கோடி வாக்குகளை கடந்து விஜய் முதலிடத்தில் உள்ளார். எம்ஜிஆர் களமிறங்கிய முதல் தேர்தலில் 1977 ஆம் ஆண்டு, அதிமுக 33.52 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது.
இதேபோல் தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது வரை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 68 தொகுதிகளில் முன்னிலையும், 38 தொகுதிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

