“கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்”- எம்ஜிஆருக்கு விஜய் புகழாரம்

 
“கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்”- எம்ஜிஆருக்கு விஜய் புகழாரம்

இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

விஜய்


மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108-வது பிறந்தநாள் விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என புகழாரம் சூட்டியுள்ளார்.