தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எ.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை… pic.twitter.com/5bDhtzaH1y
— TVK Vijay (@tvkvijayhq) December 24, 2024
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.


