“கோவையில் கல்லூரி மாணவி வன்கொடுமை... நெஞ்சம் பதறுகிறது”- விஜய்

 
vijay

கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நீதி வெல்லும்” - 13 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்த த.வெ.க. தலைவர் விஜய்!

கோவை விமானநிலைய பகுதியில் நேற்றிரவு (2.11.2025) கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சமூக விரோதிகள் மூன்று பேர் கார் கண்ணாடியை அரிவாளைக் கொண்டு உடைத்து, இளம் பெண்ணின் நண்பர் வினித்-யை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இளம்பெண்ணையும் தாக்கி 500 மீட்டருக்கு அப்பால் தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியுள்ளனர். வினித் மயக்கம் தெளிந்து காவல்துறைக்கு தகவல் சொல்லி, காவல்துறை வந்து மீட்டு சிகிச்சைக்காக இளம் பெண்ணையும், வினித்தையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விமானநிலையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையிலேயே  இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 


இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.