"ஊழலை ஒழிக்க நான் எடுத்த Step-ல.. திமுக ஆடிப்போய் இருக்கு"- முதல்வர் விஜய் அதிரடி
உங்க வாழ்க்கையவே பாதிக்கிற ஊழலை பார்த்துட்டு எப்படிங்க என்னால சும்மா இருக்க முடியும்? என முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், "பள்ளிக்கல்வித்துறையை ஊழல் துறையாக திமுக மாற்றியுள்ளது. பள்ளிகளுக்கு அனுமதி தருவதில் பெரிய ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொரு பள்ளிகளிடமும் ரூ.40 லட்சம் வாங்கி உள்ளனா். 127 பள்ளிகளின் நிா்வாகிகள் புகாா் அளித்துள்ளனா், அனைவரும் சிக்குவார்கள். கல்வித் துறையிலேயே ஊழல் நடக்கிறது என்றால் அதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஊழலை ஒழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும். ஏஐ பயன்படுத்தி வளர்ச்சி இருக்கும் என்று பார்த்தால், ஊழல் தான் நடக்கிறது. மற்ற துறைகளில் ஊழல் நடந்தால் நீதிமன்றம் பார்த்து கொள்ளும் காவல்துறையில் எப்படி பார்ப்பது ?
ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பசங்களின் பியூச்சருக்காக அரசியலுக்கு வந்தேன் என்று நான் சும்மா எல்லாம் சொல்லவில்லை. அப்படிப்பட்ட உங்கள் வாழக்கையை பாதிக்கும் அளவிற்கு இந்த மாதிரி எல்லாம் நடந்தால் எப்படிங்க பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியும்? மக்கள் எல்லாரும் ஊழலுக்கு பழகிப் போய் விட்டார்கள் என்று நாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா, அது ஒரு நாள்பட்ட நோய் மாதிரி. அதை குணப்படுத்த முடியுமானு சிலர் கேட்கலாம். குணப்படுத்தவில்லை என்றாலும் கட்டுப்படுத்தலாம் இல்லையா? அதற்கு முயற்சி எடுக்கலாம் இல்லையா? அப்படி நான் எடுத்த முயற்சியால்தான் இங்கே சில பேருக்கு பேஸ்மென்ட் எல்லாம் ஆடிப் போய் கிடக்கிறது. ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும்.. கல்வித்துறையில் ஊழல் என்பதை எப்படி ஏற்க முடியும்? கோவை பெரியார் அறிவுலகில் முறைகேடு நடந்திருப்பது வெளியே வருகிறது. மற்ற நூலகங்களில் என்ன நடந்திருக்கிறதோ? ஒவ்வொன்றாக வரும். இதெல்லாம் அறிவுலகமா? ஊழல் உலகமா? நம் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? உங்கள் அண்ணன், உங்களை நல்ல வழியில் மட்டும்தான் கூட்டிக் கொண்டு போவான்" எனக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

