"என் சகோதரிகளை அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது"- விஜய்
தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடைபெற்ற நிலையில், அவரைக் காண லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் தவெகவினர் வந்திறங்கினர்.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதல்வர் விஜய், “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்கும் ஆள் நான் கிடையாது. என் சொந்தங்களை நான் எப்போது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பார்ப்பேன். அதைப்பற்றி உங்களுக்கென்ன? மறக்கிற மாதிரியா ஸ்டாலின் நேற்று முன் தினம் பேசினார்? காது கொடுத்து கேட்க முடியாத படிதான் அவர் வளர்த்து வைத்திருக்கும் எல்லோரும் பேசுகிறார்கள். என்னை பற்றி எது வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், என் சகோதரியை பற்றியோ பெண்களை பற்றியோ பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்பெண்களை பற்றி அவதூறு பேசினால் சும்மா விடமாட்டேன். திமுகவும், அதிமுகவும் மறைமுக கூட்டு. யாருடன் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் சே்ர்ந்துகொண்டு அதிமுகவினர் செயல்பட்டுவருகின்றனர்.” என்றார்.

