“ஊழல் ஒழிப்பில் முனைப்புடன் உள்ளோம்”- முதல்வர் விஜய்

 
“ஊழல் ஒழிப்பில் முனைப்புடன் உள்ளோம்”- முதல்வர் விஜய்

திருப்பூர் தாராபுரம் அருகே சித்ராவுத்தன்பாளையத்தில் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். தவெக வேட்பாளர் சத்தியபாமகவுக்கு ஆடரவாக தாராபுரம் பொதுக்கூட்டத்தில் விஜய் வாக்கு சேகரித்தார். முன்னதாக பொதுக்கூட்டதிடலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தாராபுரம் தொகுதி மக்களுக்கு என் வணக்கம். முதல்வராக வரவில்லை, உங்கள் வீட்டு பிள்ளையாக, தாய்மாமனாக வந்துள்ளேன். வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஊழல் ஒழிப்பில் முனைப்புடன் உள்ளோம். ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சமற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு செய்து வருகிறோம். கோயில், பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிறப்புப்படை அமைக்கப்பட்டு புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2 முதல் வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நெல், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது” என பட்டியலிட்டார்.