"என் தாயை தவறாக பேசியபோது கூட நான் பொறுத்துக் கொண்டேன்”- விஜய்

 
"என் தாயை தவறாக பேசியபோது கூட நான் பொறுத்துக் கொண்டேன்”- விஜய்

என் சொந்த தாயைதிமுகவினர்தவறாக பேசும்போது கூட பொறுத்துக்கொண்டேன் என முதல்வர் விஜய் கூறினார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “தவெக மீதுதிமுகவால் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை. என் சொந்த தாயைதிமுகவினர்தவறாக பேசும்போது கூட பொறுத்துக்கொண்டேன். எனக்கு தாய் அன்பு காட்டும் பெண்களை திமுகவினரும், தலைமையும் அவதூறாகத்தான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் பச்சைக் குழந்தைகளை ஒருவன் பல வருடமாக சீரழித்துக் கொண்டிருந்தான். சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது. ‘திக் ஸ்கின்’ என்று சொல்வார்கள். உலகத்தில் நான் மட்டும்தான் அதற்கு உதாரணம். 34 வருசமா எல்லாத்தையும் பார்த்துவிட்டுதான் வந்துள்ளேன். எனக்கு இது புதிதல்ல. எனக்கு இது பத்தல, நிறைய எதிர்பார்க்கிறேன் என்றுதான் தோன்றுகிறது. 

சட்டமன்றத்தில் திமுகவினர் கத்துகிறார்கள். எதற்காகக் கத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியமாட்டேங்குது. எனக்கு சட்டமன்றம் புதிது; பேசலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களின் நோக்கம் புரிந்துவிட்டது. நான் பேசக்கூடாதாம். அதனால், நான் கத்திப் பேசினேன். நான் சினிமாவுல ஜெயிச்சதுக்கும் அரசியல்ல ஜெயிச்சதுக்கும் தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம்.திமுகவிடம் கூட்டணி போட்டு ஆட்சி அமைக்க நினைத்தால் எம்ஜிஆர் விசுவாசிகள் எப்படி ஏற்பார்கள்? மரகதம் குமரவேல் மனதில் எவ்வளவு வலி இருந்திருக்கும்? அதே வலி தானே எம்ஜிஆர் தொண்டர்களுக்கு இருந்திருக்கும். கவலைப்படாதீர்கள், நான் இருக்கிறேன், உங்களை பார்த்துக் கொள்கிறேன். எம்ஜிஆர், ஜெ., போல எனக்கும் திமுக தான் எதிரி” என்றார்.