“6 மாசம் அமைதி காப்போம் என சொன்னவர்களால் 6 நாள் கூட இருக்க முடியவில்லை. ஆட்சி அமைத்த 6 நாளிலேயே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்”- விஜய்

 
s

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்  நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி. முதலமைச்சர் ஆக இல்லை.முதல் சேவகன் ஆக என்னை ஆக்கியிருக்கிறீர்கள் அதற்கு என் நன்றி. தமிழகத்திற்கு எப்படி திருச்சி இதயமோ. அதுபோல் திருச்சி கிழக்கும் எப்பொழுதும் என் இதயத்திற்கு நெருக்கமானது. எம்ஜிஆர் சந்தித்த முதல் தேர்தலான 1977 தேர்தலைவிட தவெகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. நான் அதிகமாக பேசுபவன் கிடையாது, கூட்டங்களில் அதிகபட்சமாக 20 நிமிடங்கள்தான் பேசியுள்ளேன். எனக்கு எதிரிகள் இல்லை என்று நினைக்கமாட்டேன். ஆட்சிக்கு வந்து சில வாரங்கள் கூட ஆகல; ஆறு மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள் எல்லாம் ஆறு நாள் கூட அமைதியாக இல்லை. ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்திற்குள் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கல்யாண வீட்டில் எல்லாம் போய் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்” என்றார்