“நான் கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போகல; ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ட்டுதான் கட்சியே ஆரம்பிச்சேன்”- விஜய்

 
ச்

ஆட்சி முழுக்க ஊழல், ஊழல் என ஊறிப் போயிருக்கிறது. எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்பீர்கள் என தவெக விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் பரப்புரை கூட்டத்தி பேசிய விஜய், “கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் நான் போகல. ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பிச்சிருக்கேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை. தப்பு நடக்க விட மாட்டேன். ஆட்சி முழுக்க ஊழல், ஊழல் என ஊறிப் போயிருக்கிறது. எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்பீர்கள், பணத்தால் மக்களை விலைக்கு வாங்க முடியாது. இந்த தேர்தல் முடிவுகளை திமுகவாலோ மற்றும் பலர் கூட்டணியாலோ மாற்ற முடியாது, சுற்றி இருப்பவர்களை வைத்து என் மீது தேர்தல் நேரத்தில் அவதூறு பரப்பினர். மற்றவர்களுக்குதான் இது Election, விஜய்க்கு, விஜய்யோடு நிற்பவர்களுக்கும் இது Emotion. கரூர் விவகாரத்தில் என்ன நடந்தது என எல்லாருக்கும் தெரிந்தும். என் மீது அவதூறு பரப்பினார்கள். காமராஜர் மாதிரி, எம்.ஜி.ஆர். மாதிரி யாரும் வர மாட்டார்களா? என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா மக்களை நேசிக்கும் உங்கள் விஜய் வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.