“எனக்கு எதற்குமே ஆசை இல்லை”- விஜய்

 
விஜய் விஜய்

புதிதாக வந்த கட்சி என குறைத்து மதிப்பிடுவது நமக்கு என்ன புதிதா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “30 வருடங்களாகத் தன்னை குறைத்து மதிப்பிடுவது வழக்கமாகத்தானே உள்ளது. நம்மை நம்புபவர்களுக்காக உழைப்பது ஒரிஜினல் கேரக்டராக மாறிவிட்டது, அரசியலுக்கு வந்ததற்கு பிறகும் சரி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகும் சரி முன்பு இருந்தவர்கள் மாதிரியே இப்போ இருப்பவர்கள் மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன். ஒரு பைசா கூட தொட மாட்டேன் எனக்கு அது அவசியமும் கிடையாது. ஒரு துளி ஊழல் படியவும் படியாது படியவும் விடமாட்டேன். என் கரியரில் மக்கள் எனக்கு உச்சமான இடத்தை கொடுத்துள்ளனர். என் குணம் என்றும் மாறாது, என்றுமே ஊழல் செய்ய மாட்டேன், ஒரு துளி ஊழல் கரை கூட படிய விடமாட்டேன். எனக்கு எதற்குமே ஆசை இல்லை, எனக்கு துளி கூட பணத்தின் மேல் ஆசையே இல்லை, எனக்கு அது தேவையும் இல்லை. என் கண் முன்னாடி நடக்கும் ஊழலை எதிர்த்து கேட்பேன், அதற்கான தைரியம் நம்மிடம் மட்டும் தான் உள்ளது.தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதம் தான் இருக்கிறது. உங்களுக்கு இந்த விஜயை பிடிக்கும் என்பது உண்மை என்றால் சத்தியம் என்றால் உங்கள் உழைப்பை காட்டுங்கள். இந்தப் போரை தலைமை தாங்கும் தளபதிகள் நீங்கள் தான்” என்றார்.

பின்னர் 2026 தேர்தலில் உண்மையாகவும், சத்தியமாகவும், உறுதியாகவும், ஒற்றுமையாகவும், உழைப்போம் என நிர்வாகிகளை எழுந்து நின்று உறுதிமொழி ஏற்க வைத்தார் தவெக தலைவர் விஜய்.