#BREAKING மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது! விரைவில் சந்திக்கிறேன் - விஜய் வீடியோ
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

CM சார்..என்னை என்ன வேணாலும் பண்ணுங்க..அவங்கள விட்ருங்க..
— Top Tamil News (@toptamilnews) September 30, 2025
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ#Karur #KarurTragedy #TVKVijay pic.twitter.com/0SJI9tMyqF
அதில், “அனைவருக்கும் வணக்கம்... என் வாழ்வில் இதுபோன்ற வலி மிகுந்த ஒரு சூழலை நான் அனுபவித்ததே இல்லை. மனது முழுவதும் வலி நிறைந்துள்ளது. வலி மட்டும்தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும் தான். அந்த அன்பும் பாசத்திற்கும் என்றும் கடமை பட்டுள்ளேன். அதனால் தான் சுற்றுப்பயணத்தில் மக்களுக்கு எந்த பாதிப்பும் மக்களுக்கு வரக்கூடாது என்பது எனது மனதில் இருந்தது. மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்பதால் மக்களை சந்திக்க கரூருக்கு நேரில் செல்லவில்லை. கூடிய விரைவில் அனைவரையும் சந்திக்கிறேன். சூழலை புரிந்துகொண்டு தவெகவுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி” என்றார்.


